பள்ளிக்குள் புகுந்து மாணவனை கொலை செய்த மர்ம நபர்கள்..!

337

குஜராத் மாநில பள்ளி ஒன்றில் மாணவனை கொலை செய்த மர்ம நபர்களை விரைந்து கண்டுப்பிடிக்க வலியுறுத்தி, பெற்றோர் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வடோதராவில் உள்ள பள்ளி ஒன்றில், 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவனை, மர்ம நபர்கள் சிலர் சரமாரியாக கத்தியால் குத்தினர். இதனால் படுகாயம் அடைந்த மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். பின்னர் மாணவனின் உடலை கழிப்பறையில் போட்டு விட்டு, மர்ம நபர்கள் தப்பி சென்றனர். பள்ளிக்குள் மர்மநபர்கள் நுழைந்து அரங்கேற்றிய இந்த கொலை சம்பவம், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகளை பிடிக்க வலியுறுத்தி, பொதுமக்கள் பள்ளி முன்பாக போராட்டம் நடத்தினர்.