பா.ஜ.க. ஆட்சியில் அன்னிய முதலீடு ஒன்பது லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக பெருமிதம்…..

116

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னர் அன்னிய நேரடி முதலீடு ஒன்பது லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியுள்ளது.
இந்த மாநாட்டை துவக்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, ஜனநாயகம் நம்முடைய முக்கிய பலம் என்றும், இளைய சமுதாயமே முக்கிய மூலதனம் என்று தெரிவித்தார். மின்னனு பொருளாதாரத்தை நோக்கி இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது என்று கூறிய பிரதமர் மோடி, மின்னணு நிர்வாகம் எளிமையானது, பயன்மிகுந்தது என்று குறிப்பிட்டார். தொழில் துறையில் மாநிலங்களிடையே ஆரோக்கியமான போட்டி நிலவ வேண்டும் என்றும், உலக பொருளாதரம் வலுவிழந்த நிலையில், இந்திய பொருளாதாரம் சிறப்பாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். சிறப்பான ஆட்சி நடைபெறுவதற்கு மின்னணு முறையே சிறந்தது என்று கூறிய அவர், இந்திய பொருளாதாரத்தில் சீர்திருத்தம் செய்வதில் இந்தியா உறுதியாக இருப்பதாக கூறினார். உலகின் 6-வது பெரிய உற்பத்தி நாடாக இந்தியா உருவாகி உள்ளதாக தெரிவித்த மோடி, பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த அன்னிய நேரடி முதலீடு ஒன்பது லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும் பெருமிதத்துடன் கூறினார்.