கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சென்னையை சேர்ந்த டேனியல் சூரியா, 64 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 360 துணிகளை அயணிங் செய்து, காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

259

கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சென்னையை சேர்ந்த டேனியல் சூரியா, 64 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 360 துணிகளை அயணிங் செய்து, காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
2012 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த கார்த் சாண்டர்ஸ் என்பவர் 100 மணி நேரத்தில், ஆயிரத்து 157 துணிகளை அயணிங் செய்து கின்னஸ் சாதனை படைத்தார். இதனை முறியடிக்கும் வகையில் சென்னையை சேர்ந்த டேனியல் சூரியா என்பவர், தனியார் வணிக வளாகத்தில் உள்ள அரங்கில், 101 மணி நேரத்தில் இரண்டாயிரத்து 100 துணிகளை இலக்காக நிர்ணயித்து, கடந்த 29-ஆம் தேதி தேய்க்கும் முயற்சியைத் தொடங்கினார். தற்போது அவர், 64 மணி நேரத்திலேயே 4 ஆயிரத்து 360 துணிகளை இஸ்திரி செய்து அசத்தியுள்ளார். இலக்கை தாண்டிய பின்னரும், இவரது சாதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்றுடன் தமது 101 மணி நேர சாதனையை முடிக்க அவர் திட்டமிட்டுள்ளார். டேனியல் சூர்யாவின் இந்த அயராத முயற்சிக்கு பாராட்டுக்குள் குவிந்து வருகிறது.