டெண்டர் முறைகேடுகள் திமுக ஆட்சியில் நடந்ததாக குற்றச்சாட்டு – அமைச்சர் ஜெயக்குமார்

137

டெண்டர் முறைகேடுகள் திமுக ஆட்சியில் தான் நடைபெற்றதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டினார்.

தியாகிகள் தினத்தை முன்னிட்டு, சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் அமைந்துள்ள தியாகிகள் சங்கரலிங்கனார், ஆர்யா என்கிற பாஷ்யம் மற்றும் செண்மகராமன் ஆகியோர் திருவுருவப்படத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மா.பா.பாண்டியகராஜன், கடம்பூர் ராஜீ, பெஞ்சமின், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் வளர்மதி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்த்தன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், பொதுப்பணித்துறையில் திமுக ஆட்சியில் தான் டெண்டர் முறைகேடுகள் நடைபெற்ற விளக்கமளித்தார். இந்த முறைகேடுகள் குறித்து மு.க.ஸ்டாலின் ப பதிலளிக்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தினார். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், முட்டை கொள்முதல் விவகாரத்தில் மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளதாகவும் தெரிவித்தார்.