கூடலூர் அருகே காயத்துடன் சிறுத்தைபுலி ஒன்று மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

284

கூடலூர் அருகே காயத்துடன் சிறுத்தைபுலி ஒன்று மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள மண்குழி பகுதியை சேர்ந்தவர் தாமஸ். இவர் தனது வீட்டின் அருகே, சுமார் 4 வயது மதிக்கத்தக்க சிறுத்தைபுலி ஒன்று காயத்துடன் உறுமிக்கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இவர் அளித்த தகவலின்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு, உடனடியாக காயமடைந்த சிறுத்தை புலிக்கு முதல் உதவி செய்யப்பட்டது. பின்னர், மேல்சிகிச்சைக்காக முதுமலை புலிகள் காப்பகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனிடையே, சிகிச்சை பலனின்றி சிறுத்தை உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.