ஜி.எஸ்.வரி விதிப்பை எதிர்த்து மெழுகு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்தப்…

192

ஜி.எஸ்.வரி விதிப்பை எதிர்த்து மெழுகு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தருமபுரி மற்றும் கிருஷ்ணரி மாவட்ட மெழுகு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அச்சங்கத்தின் செயலாளர் பாலாஜி, தீப்பெட்டி தொழிற்சாலைகளில் மரக்குச்சி மற்றும் மெழுகு குச்சி என இரண்டு வகையாக இருந்தாலும் ஜி.எஸ்.டிக்கு முன் ஒரே வரி கட்டமைப்பின் கீழ் இயங்கி வந்ததாக தெரிவித்தார். ஜி.எஸ்.டிக்கு பின் இரண்டு வரிகள் விதிக்கப்பட்டதாக கூறிய அவர், இதனால் தீப்பெட்டி தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார்.