குறிப்பிட்ட சில பொருட்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு தேவை!

347

குறிப்பிட்ட சில பொருட்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று, முதலமைச்சரிடம் வணிகர் சங்க பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா சந்தித்து பேசினார். ஜிஎஸ்டி வரிவிதிப்பால் வணிகர்கள் எதிர்கொண்டு வரும் சிரமங்களை விளக்கிய அவர், குறிப்பிட்ட சில பொருட்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விக்கிரமராஜா, வணிகர்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவி சாய்க்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.