திமுகவும், காங்கிரசும் ஜி.எஸ்.டியை குறைகூறுவது வேடிக்கையாக உள்ளது. : தம்பிதுரை

229

ஜி.எஸ்.டி. மசோதாவை திமுகவும், காங்கிரசும் குறை கூறுவது வேடிக்கையாக உள்ளதாக மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஜி.எஸ்.டி. மசோதாவைக் கொண்டு வந்ததே காங்கிரசும், திமுகவும்தான் என்பதை சுட்டிக்காட்டிய அவர், தற்போது இரண்டுக் கட்சிகளும் ஜி.எஸ்.டி.க்கு எதிர்ப்புத் தெரிவிப்பது வேடிக்கையாக இருப்பதாகக் குறிப்பிட்டார். உரிமைகள் பறிபோகக் காரணமாக இருந்தவர்கள் திமுகவும், காங்கிரசும்தான் என்றும் குற்றஞ்சாட்டினார். மறைந்த ஜெயலலிதாவின் கோரிக்கைகளை ஏற்று ஒருசில மாற்றங்களை செய்ததாலேயே ஜி.எஸ்.டி.க்கு அதிமுக ஆதரவு அளித்ததாகவும் தம்பிதுரை கூறினார்.