ஜி.எஸ்.டி வரிவிதிப்பிற்கு எதிராக விசைத்தறி உற்பத்தியாளர்கள் தொடர் வேலைநிறுத்தம் !

281

சங்கரன்கோவிலில் ஜி.எஸ்.டி வரிவிதிப்பிற்கு எதிராக விசைத்தறி உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் தொடர் வேலை நிறுத்தத்தால், 10 கோடி ரூபாய் மதிப்பிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயத்திற்கு அடுத்தப்படியாக, நெசவுத் தொழில் விளங்கி வருகிறது. இதில் சங்கரன்கோவில் நகரில் மட்டும், 5 ஆயிரத்திற்கும் அதிகமான விசைத்தறி கூடங்களில், 10 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கிருந்து சேலம், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாநிலங்களுக்கும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் துணி வகைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில், சங்கரன்கோவில்,
கரிவலம்வந்த நல்லூர், சுப்புலாபுரம், சிந்தாமணி பகுதிகளில் உள்ள விசைத்தறி உற்பத்தியாளர்கள், மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவைவரிவிதிப்பில் இருந்து, முழுவிலக்கு அளிக்க வேண்டி கடந்த 10 நாட்களாக தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக, நாள் ஒன்றுக்கு 1 கோடி ரூபாய் வீதம், 10 நாட்களில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.