மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டிக்கு எதிராக கருத்துகள் -தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம்!

373

விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தில், ஜி.எஸ்.டிக்கு எதிராக கருத்துகள் இடம் பெற்றுள்ளதாக தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவொற்றியூரில் உள்ள தியாகராஜசுவாமி திருக்கோவில் சாமி தரிசனம் செய்ய வந்த தமிழிசை, பக்தர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி வரி பற்றியும், மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டம் குறித்து தவறான தகவல் பதிவிட்டுள்ளதாக குற்றம்சாட்டினர். மத்திய அரசின் திட்டங்களை விஜய் போன்ற நடிகர்கள் பொதுமக்களிடம் தவறான கருத்துகளை முன்னிறுத்துவதாகவும் தமிழிசை தெரிவித்தார். ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்றும் தமிழிசை கூறினார்.