ஜி.எஸ்.டி வரியை குறைக்க வேண்டும்-ஜி.கே.வாசன்!

250

பல்வேறு பொருட்களுக்கு ஜி.எஸ்.டியை குறைத்திருக்கும் அறிவிப்பு அவசியமானது என்று தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜி.எஸ்.டி வரி அமல்படுத்திய பிறகு உணவகங்கள், பட்டாசு, ஜவுளித்தொழில் உள்ளிட்ட சிறுகுறு தொழில்கள் பாதிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
அப்போதே தமிழ்மாநில காங்கிரஸ் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் ஜி.எஸ்.டியை குறைக்க வேண்டும் என வலியுறுத்தியதை சுட்டிக் காட்டிய ஜி.கே.வாசன்,
தற்போது 213 வகையான பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரியை குறைப்பதாக மத்திய அரசு தாமதமாக அறிவித்திருந்தாலும் அது அவசியமான ஒன்று என தெரிவித்துள்ளார்.
மேலும் சாதாரண மக்கள் பயன்படுத்தும் தீப்பெட்டி, பட்டாசு போன்ற பல்வேறு வகையான பொருட்களுக்கு இன்னும் வரியை குறைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.