gst

டெல்லியில் நேற்று நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு பொருட்கள் வரி விலக்கு மற்றும் வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளன

* பல்வேறு கோரிக்கைகளுக்கு பிறகு பெண்களின் அத்தியாவசிய தேவையான சானிட்டரி நாப்கின்களுக்கு ஜிஎஸ்டி யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

* இதே போல், செறிவூட்டப்பட்ட பாலுக்கும் ஜி.எஸ்.டி. வரியில் இருந்து முற்றிலுமாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

* எண்ணெய் நிறுவனங்கள் பயன்படுத்தும் எத்தனாலுக்கு விதிக்கப்பட்ட 18 சதவீத ஜி.எஸ்.டி வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

* இறக்குமதி செய்யப்படும் யூரியா மீதான வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

* ஆயிரம் ரூபாய் வரையிலான காலணிகள் மீதான ஜி.எஸ்.டி. வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

* பெயின்ட் மற்றும் வார்னிஷ்களுக்கான ஜி.எஸ்.டி வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

* 27 இஞ்ச் வரையிலான டிவி, வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், மிக்ஸி, கிரைண்டர் வகைகளுக்கு விதிக்கப்பட்ட 28 சதவீத ஜி.எஸ்.டி இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

* சிறப்பு வாகனங்கள், டிரக், டிரெயிலர்களுக்கான ஜி.எஸ்.டி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.