ஜிசாட்- 6 ஏ’ செயற்கைக்கோள் ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் வாயிலாக இன்று விண்ணில் பாய்கிறது ..!

467

தகவல் தொடர்புக்கு பயன்படும், ‘ஜிசாட்- 6 ஏ’ செயற்கைக்கோள், ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் வாயிலாக, இன்று மாலை, விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான 27 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று பிற்பகல் துவங்கியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, ‘இஸ்ரோ’ சார்பில், பி.எஸ்.எல்.வி., மற்றும் ஜி.எஸ்.எல்.வி., ரக ராக்கெட்டுகள் விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தகவல் தொடர்பு வசதிக்கான அதிநவீன, ‘ஜிசாட்- 6 ஏ’ செயற்கைக்கோளை, ‘இஸ்ரோ’ வடிவமைத்து உள்ளது. இந்த செயற்கைக்கோள், ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் 2-வது ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான, 27 மணி நேர கவுன்ட் டவுன், நேற்று மதியம் 1:57 மணிக்கு துவங்கிய நிலையில், இன்று மாலை, 4:56 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி., எப் -8 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்கிறது.