ஜி.எஸ்.எல்.வி. எப்-8 ராக்கெட் மூலம் ஜிசாட்-6 ஏ செயற்கைக்கோள் நாளை மறுநாள் விண்ணில் ஏவப்படவுள்ளது..!

419

ஜி.எஸ்.எல்.வி. எப்-8 ராக்கெட் மூலம் ஜிசாட்-6 ஏ செயற்கைக்கோள் நாளை மறுநாள் விண்ணில் ஏவப்படவுள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்களை விண்ணுக்கு செலுத்தி சாதனை படைத்து வருகிறது. இந்தநிலையில், ஜி.எஸ்.எல்.வி. எப்-8 ராக்கெட் மூலம் ஜிசாட் 6-ஏ செயற்கைக்கோளை இஸ்ரோ நாளை மறுநாள் விண்ணில் செலுத்துகிறது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து தகவல்தொடர்பு செயற்கைக்கோளுடன் இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. ஜி.எஸ்.எல்.வி. எப்-8 இஸ்ரோ தயாரித்த 12-வது ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.