இன்று மாலை 5.28 மணிக்கு ஜிசாட் – 19 செயற்கைக்கோளை மார்க் – 3 ஏந்தி செல்கிறது.

298

இந்தியாவின் மிகப் பெரிய ஜிஎஸ்எல்வி மார்க் – 3 ராக்கெட் இன்னும் சற்று நேரத்தில் விண்ணில் செலுத்தப்படுகிறது. ஜசாட் – 19 செயற்கைக்கோளை இந்த ராக்கெட் ஏந்திச் செல்கிறது.
விண்வெளி ஆராய்ச்சி, செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக செலுத்துவது ஆகியவற்றில் இந்தியா பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. அந்த வகையில் உள்நாட்டு தொழில் நுட்பத்தில் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 4 டன் எடை கொண்ட செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி முடியும். கிரையோஜெனிக் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ள இந்த ராக்கெட்டின் வெற்றிப் பயணம், இஸ்ரோவின் சர்வதேச சந்தையை மேலும் வலுப்படுத்தும்.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் ஏவுதளத்தில் இன்று மாலை 5.28 மணிக்கு ஜிசாட் – 19 செயற்கைக்கோளை மார்க் – 3 ஏந்தி செல்கிறது. 3 ஆயிரத்து 136 கிலோ எடை கொண்ட ஜிசாட், தகவல் தொடர்பு மேம்பாட்டுக்கு பேருதவியாக இருக்கும். இந்த செயற்கைக்கோள் மூலம், இந்தியாவின் இணைய தள சேவை சர்வதேச வேகத்துக்கு நிகராக அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.