பிப்ரவரி 11ல் நடக்கும் குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியீடு..!

403

பிப்ரவரி 11-ஆம் தேதி நடைபெற உள்ள ஒருங்கிணைந்த குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுக்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.டிஎன்பிஎஸ்சி நடத்தும் இளநிலை உதவியாளர், தட்டச்சர், நில அளவையர், விஏஓ ஆகிய பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த குரூப் 4 தேர்வு வரும் பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த குரூப் 4 தேர்வுக்கு, இதுவரை இல்லாத அளவுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுக்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்ப பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை உபயோகித்து ஹால் டிக்கெட்டுக்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.