சென்னை மாம்பலத்தில் நடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவி கிரகலட்சுமி வீட்டில் கொள்ளை ..!

610

சென்னை மாம்பலத்தில் நடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவி கிரகலட்சுமி வீட்டில் பூட்டை உடைத்து 170 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சென்னை தி.நகர் தெற்கு போக் சாலையில் நடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவி கிரகலட்சுமியின் சகோதரர் நாகராஜ்(51) வசித்து வருகிறார். கிரகலட்சுமி அடையாரில் வசித்து வருவதால் எப்போதாவது தான் இங்கு வந்து தங்குவார். இந்நிலையில், நாகராஜ் இரவில் தூங்கியிருந்தபோது, வீட்டில் உள்ளே நுழைந்த மர்மநபர்கள், இரண்டு அறைகளின் பூட்டை உடைத்து, நகை பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து, காலையில் அறிந்த நாகராஜ், கிரகலட்சுமிக்கு தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து, கிரகலட்சுமி வந்துபார்த்தபோது, இரண்டு அறைகளிலும் மொத்தம் 170 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, அதிர்ச்சியடைந்த கிரகலட்சுமி, மாம்பலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய், தடயவியல் நிபுணர்களுடன் சென்ற காவல்துறையினர், தடயங்களை சேகரித்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.