கிரானைட் முறைகேடு வழக்கில் அரசுக்கு ஆயிரத்து 365 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

302

கிரானைட் முறைகேடு வழக்கில் அரசுக்கு ஆயிரத்து 365 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கிரானைட் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக பல வழக்குகள் மேலூர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தவிர, அமலாக்கப்பிரிவு அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். கிரானைட் முறைகேடு தொடர்பாக பல வழக்குகளில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். பி.ஆர்.பி., நிறுவனத்தினரின் சொத்துக்களை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் முடக்கி வைத்துள்ளனர். இந்நிலையில், இன்று பி.ஆர்.பி., உள்ளிட்ட 4 நிறுவனங்கள் மீது போலீசார் மேலூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். 3 ஆயிரத்து 633 பக்கங்கள் கொண்ட அந்த குற்றப்பத்திரிகையில், தமிழக அரசுக்கு ஆயிரத்து 365 கோடியே 96 லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.