கிரானைட் மோசடி குறித்து தொடரப்பட்ட 3 வழக்குகளில் மேலூர் நீதிமன்றத்தில் ஆயிரத்து 158 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

261

கிரானைட் மோசடி குறித்து தொடரப்பட்ட 3 வழக்குகளில் மேலூர் நீதிமன்றத்தில் ஆயிரத்து 158 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர், கீழவளவு, உறங்கான்பட்டி பகுதிகளில் விதிமுறைகளை மீறி, முறைகேடாக, அரசு இடங்களில் அனுமதியில்லாமல் கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததாக பி.ஆர்.பி., பி.எஸ் கிரானைட்ஸ் மற்றும் முன்னாள் திமுக எம்.எல்.ஏ., வேலுச்சாமி ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது.
தமிழக அரசுக்கு 121 கோடியே 71 லட்ச ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக இவர்கள் மீது மூன்று வழக்குகள் மேலூர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. இந்த வழக்குகளில், இன்று நடைபெற்ற விசாரணையின்போது, ஆயிரத்து 158 பக்க குற்றப்பத்திரிக்கையை மேலூர் நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்தனர்.