அரசு அனுமதித்ததை விட கூடுதலாக கிரானைட் கல் வெட்டி எடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் மேலூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

256

அரசு அனுமதித்ததை விட கூடுதலாக கிரானைட் கல் வெட்டி எடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் மேலூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே, நாவினிபட்டி, பூலாம்பட்டி, கீழவளவு, ஒத்தக்கடை பகுதிகளில் அரசு சொத்துக்களை சேதப்படுத்தி கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததாக காவல்துறையினர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை மேலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில், ஆயிரத்து 292 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கையை மேலூர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் தாக்கல் செய்தனர். பி.ஆர்.பி., பி.கே.எஸ். உள்ளிட்ட 4 கிரானைட் நிறுவனங்கள் மீது மேலூர் நீதிமன்றத்தில் இந்த குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யபப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகையில், கிரானைட் கற்களை வெட்டியதால் 748 கோடியே 41 லட்ச ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.