கமல்ஹாசனின் கருத்தில் யாரும் தலையிட முடியாது : நடிகை கவுதமி கருத்து.

1686

தமிழகத்தில் ஊழல் பெருகி விட்டது என்ற கமல்ஹாசனின் கருத்தில் யாரும் தலையிட முடியாது என்று நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசுக்கு எதிராக நடிகர் கமல்ஹாசன் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு தரப்பினரும் கருத்துகளைக் கூறி வருகின்றனர். சமீபத்தில், தமிழகத்தில் நடைபெறும் ஊழல்கள் குறித்து அந்தந்த துறை அமைச்சர்களுக்கு மெயில் அனுப்புமாறு கமல் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து, அமைச்சர்களின் இணையதள இ-மெயில் முகவரிகள் முடக்கப்பட்டன. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய நடிகை கவுதமி, தமிழகத்தில் ஊழல் பெருகி விட்டது என கமல்ஹாசன் கூறியது அவரது சொந்த கருத்து என்றும், அதில் யாரும் தலையிட முடியாது என்றும் தெரிவித்தார். நாட்டில் நடக்கும் நல்ல விஷயங்களையும் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என கவுதமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.