மத்திய, மாநில அரசு ஊழியர்களின் சம்பள நாள் நெருங்குகிறது…… வங்கிகளில் அடுத்த வாரம் குவியும் கூட்டத்தை சமாளிக்க சிறப்பு ஏற்பாடுகள்.

323

மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு மாத சம்பளம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டதையடுத்து, கூட்ட நெரிசலை தவிர்க்க வங்கிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு மாத ஊதியம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அரசு ஊழியர்கள் தங்களது ஊதியத்தை வங்கிகள் மூலமாக மட்டுமே பெறமுடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் வங்கிகள் முன்பு கூட்டநெரிசல் ஏற்படும் என தெரிகிறது. இந்தநிலையில், அரசு ஊழியர்களின் சிரமத்தை போக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வங்கி கிளைகளில் மைக்ரோ ஏ.டி.எம். இயந்திரங்கள் நிறுவப்படும் என்றும், வங்கி பணியாளர்கள் கூடுதலாக பணியாற்றுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மூத்த அதிகாரிகளுக்கு பதிலாக, அவரது உதவியாளர்கள் மூலம் பணம் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு ஊழியர்களின் பணிச்சுமையை குறைக்க முடியும் என வங்கி நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதனிடையே, புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தால் மட்டுமே இயல்பு நிலைக்கு திரும்பும் எனவும், இந்த பிரச்சனையில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் பொதுநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.