அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை ஆராய அமைக்கப்பட்ட குழுவின் பதவிக்காலத்தை நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

270

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை ஆராய அமைக்கப்பட்ட குழுவின் பதவிக்காலத்தை நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆராய சாந்தஷீலா நாயர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக்குழுவின் பணிக்காலம் அண்மையில் முடிவடைந்தது. இந்தக்குழுவின் பணிக்காலம் நீட்டிக்கப்படும் என சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். இந்நிலையில், இந்தக்குழுவின் பணிக்காலத்தை மேலும் மூன்று மாதங்கள் நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பழைய ஓய்வூதியத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆராய்ந்து இந்தக்குழு அரசிடம் அறிக்கை அளிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.