பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

427

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், நளினி உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டு 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். கடந்த 2014ம் ஆண்டு இவர்கள் 7 பேரை விடுவிக்க அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா முடிவு எடுத்தார். ஆனால் தமிழக அரசின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கு தொடர்ந்தது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற விசாரணையில் 7 பேரை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு என நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டார். மேலும் 7 பேரை விடுவிக்க ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்யலாம் என்று கூறி, மத்திய அரசின் வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.