வாஜ்பாய் உடலுக்கு முக்கிய தலைவர்கள் அஞ்சலி செலுத்துவதால் பாதுகாப்பு தீவிரம்..!

141

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு தமிழக ஆளுநர், முதலமைச்சர், துணை முதல்வர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

உடல் நலக்குறைவால் காலமான முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் உடல், டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களும் நீண்ட வரிசையில் நின்று அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வாஜ்பாய் வீட்டின் முன்பு ஆயிரக்கணக்கானோர் குவிந்து வருவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, வாஜ்பாய் உடலுக்கு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அஞ்சலி செலுத்தினார். இதேபோன்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தமிழக அரசு சார்பில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் ஜெயக்குமார் வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.