வரலட்சுமி நோன்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் கலந்துகொண்டார்.

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ஸ்ரீசங்கரமடத்தில், வரலட்சுமி நோன்பு தினத்தை முன்னிட்டு, சிறப்பு கணபதி ஹோமம் வழிபாட்டுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்தசிறப்பு வழிபாட்டில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டார். ஆளுநர் வருகையையொட்டி மேற்கு மாம்பலம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன. கோயிலுக்கு வரும் பக்தர்கள் தனி வழியில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.