வருமான வரித்துறை சோதனை தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து மனு..!

186

வருமான வரித்துறை சோதனை தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து மனு அளிக்கவுள்ளார்.

அருப்புக்கோட்டையை சேர்ந்த நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் செய்யாத்துரைக்கு சொந்தமான எஸ்.பி.கே. நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் 5 நாட்களாக சோதனை மேற்கொண்டனர். இதில், 180 கோடி ரூபாய் ரொக்கம், 105 கிலோ தங்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து, செய்யாத்துரை மற்றும் அவரது மகன்களிடம் விசாரணை நடத்திய வருமான வரித்துறையினர், செய்யாத்துரையின் அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தனர்.

இந்தநிலையில், வருமான வரித்துறை சோதனை தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு நேரில் சந்தித்து பேசவுள்ளார். இதுதொடர்பாக, ஆளுநரிடம் தி.மு.க. நேரம் கேட்டிருந்தபோது, இன்று நேரம் ஒதுக்கி இருப்பதாக தெரிகிறது. அதன்படி, ஆளுநரை சந்திக்கும் மு.க.ஸ்டாலின் வருமான வரி சோதனை விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி என மனு அளிப்பார் என கூறப்படுகிறது.