அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைக்கு ரூ.60 கோடி ஒதுக்கீடு-பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்…!

373

அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் தொடங்க 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க மாதந்தோறும் 2 புதிய திட்டங்கள் உருவாக்கப்படும் என கூறினார். அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் தொடங்க 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த செங்கோட்டையன், முதல் கட்டமாக மூன்று ஆயிரம் பள்ளிகளில் இது தொடங்கப்படும் என கூறினார்.