ஊதிய உயர்வு தொடர்பாக ஒப்பந்தம் ஏற்படாவிட்டால் வேலைநிறுத்தம்-அரசு போக்குவரத்து தொழிலாளர்கள்!

394

ஊதிய உயர்வு தொடர்பாக ஒப்பந்தம் ஏற்படாவிட்டால் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது உறுதி என அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன.
அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கப்படவேண்டும். ஆனால், கடந்த 2013 ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தம் காலாவதியாகி ஒராண்டு ஆகியும் ஊதிய உயர்வு தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக தமிழக அரசுடன் போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதை கண்டித்து தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் கடந்த வாரம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும்பாலான பகுதிகளில் அரசு பேருந்துகள் இயங்கவில்லை. இந்நிலையில், ஊதிய உயர்வு தொடர்பாக வரும் 27 ஆம் தேதி தமிழக அரசுடன் தொழிற்சங்கத்தினர் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதை தவிர்க்க முடியாது என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் உறுதிப்பட தெரிவித்துள்ளன.