அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை சமாளிப்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவசர ஆலோசனை!

515
palanisamy

அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவசர ஆலோசனை நடத்தினார்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் 2வது நாளை எட்டியுள்ளது. தமிழகம் முழுவதும் பத்து சதவீதம் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். இந்நிலையில், வேலைநிறுத்தத்தை சமாளிக்கும் வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சரிசெய்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.