அரசு ஊழியர்களின் சம்பளத்தை இரண்டரை மடங்காக உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு !

453

அரசு ஊழியர்களின் சம்பளத்தை இரண்டரை மடங்காக உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்
அதன்படி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான குறைந்த பட்ச ஊதியம் 15 ஆயிரத்து 700 ரூபாயாகவும், அதிகபட்ச ஊதியம் 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஓய்வூதிய தாரர்களுக்கான குறைந்தபட்ச ஓய்வூதியம் 7 ஆயிரத்து 850 ரூபாயாகவும், அதிகபட்ச ஓய்வூதியம் 1 லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாயாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொகுப்பு ஊதியம் பெறும் பணியாளர்களுக்கான சிறப்பு காலமுறை ஊதியம் குறைந்த பட்சம் 3 ஆயிரமாகவும், அதிகபட்சம் 11 ஆயிரத்து 100 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஓய்வு பெறும் போது வழங்கப்படும் பணிக்கொடை உச்சவரம்பு 10 லட்சத்தில் இருந்து 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
புதிய ஊதிய உயர்வு 2017 அக்டோபர் 1ம் தேதி முதல் பணப்பயனுடன் வழங்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.