அரசுப்போக்குவரத்துக் கழக பேருந்து கட்டணங்களை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.

1064

அரசுப்போக்குவரத்துக் கழக பேருந்து கட்டணங்களை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், எரிபொருள் விலையேற்றம், இயக்க செலவு, பழுது நீக்கம், பராமரிப்பு செலவு, ஊதிய உயர்வை அடிப்படையாக கொண்டு கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சாதாரண மாநகர பேருந்துகளுக்கான குறைந்த பட்ச கட்டணம் 3 ரூபாயில் இருந்து 5 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

விரைவு பேருந்துகளுக்கான கட்டணம் 17 ரூபாயிலிருந்து 24 ரூபாயாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அதிசொகுசு இடைநில்லாப் பேருந்துகளுக்கான கட்டணம் 18 ரூபாயிலிருந்து 27 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதிநவீன சொகுசு பேருந்துகளுக்கான கட்டணம் 21 ரூபாயிலிருந்து 33 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

மற்ற சாதாரணப் பேருந்துகளுக்கான கட்டணம் பத்து கிலோ மீட்டர் தொலைவுக்கு, 5 ரூபாயில் இருந்து 6 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

குளிர்சாதன பேருந்துகளுக்கான கட்டணம் 27 ரூபாயில் இருந்து 42 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

வோல்வோ பேருந்துகளுக்கான கட்டணம் 33 ரூபாயில் இருந்து 51 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மலைப்பகுதிகளில் இயக்கப்படும் பேருந்துகளுக்கான கட்டணம் 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பேருந்து கட்டணம் அண்டை மாநிலங்களை விட குறைவு எனவும் போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மாற்றியமைக்கப்பட்ட பேருந்து கட்டண உயர்வு தனியார் பேருந்துகளுக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ள தமிழக அரசு,

மாற்றியமைக்கப்பட்ட பேருந்து கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவித்துள்ளது.