ஆளுனர் ரோசய்யாவின் பதவிக்காலம் வரும் நாளை மறுதினம் முடிவடைவதை அடுத்து, புதிய ஆளுனர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

241

ஆளுனர் ரோசய்யாவின் பதவிக்காலம் வரும் நாளை மறுதினம் முடிவடைவதை அடுத்து, புதிய ஆளுனர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.
தமிழகத்தின் 23-ஆவது ஆளுநராக கடந்த 2011-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-இல் கே.ரோசய்யா பொறுப்பேற்றார். அவரது பதவிக் காலம் வரும் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், புதிய ஆளுனர் குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஆளுனர் பதவிக்கு முன்னாள் முதலமைச்சர்கள் ஆனந்திபென் பட்டேல், புவன்சந்திர கந்தூரி மற்றும் பாபுலால் கவுர் ஆகியோர் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, தமிழகத்திற்கு புதிய ஆளுனர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்க
ஒரு ஆளுநரின் பதவிக் காலம் முடிவடைய 15 நாள்களுக்கு முன்பே புதிய ஆளுநர் நியமிக்கப்படுவது வழக்கம். இதுவரை அதுபோன்ற அடையாளங்கள் ஏதும் தென்படாதநிலையில், ஆளுனர் மாளிகையில் வழக்கமான பணிகளே நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ரோசய்யாவிற்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படுவது உறுதியாகியுள்ளதாக ஆளுனர் மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான மத்திய அரசின் உத்தரவு அடுத்த ஓரிரு நாட்களில் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், உத்தரவு வந்தபின்னரே, பதவி நீட்டிப்பு ஓராண்டா அல்லது இரண்டு ஆண்டுகளா என்பது தெரிய வரும். பதவி நீட்டிப்பு உத்தரவு வரப்பெற்றால், தமிழகத்தில் தொடர்ச்சியாக ஆளுனர் பதவி வகிப்பவர் என்ற பெருமையை ரோசய்யா பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.