மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு..!

480

பீகார், அரியானா, உத்தரகாண்ட் மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

பீகார் மாநில ஆளுநராக லால்ஜி டாண்டனும், அரியானா மாநில ஆளுநராக சத்யதேவ் நாராயணனும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதே போல் உத்தரகாண்ட் மாநில ஆளுநராக பேபி ராணி மவுரியா நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார். சிக்கிம் மாநில ஆளுநராக கங்கா பிரசாத், மேகாலயா ஆளுநராக ததாகத ராயும் நியமிக்கப்பட்டுள்ளனர். திரிபுரா மாநில ஆளுநராக கப்தான் சிங் சோலங்கியை நியமித்து உத்தரவிட்டுள்ள குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த், பீகார் மாநில ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக்கை ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக நியமித்துள்ளார்.