சத்தீஸ்கர் ஆளுநர் பல்ராம்ஜி தாஸ் தாண்டன் காலமானார்..!

209

சத்தீஸ்கர் ஆளுநர் பல்ராம்ஜி தாஸ் டாண்டன் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 90.

சத்தீஸ்கர் மாநில ஆளுநர் பல்ராம்ஜி தாஸ் டாண்டன் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் அவர் ராய்ப்பூரில் உள்ள அம்பேத்கர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் டாண்டன் தொடர் மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டார். இந்நிலையில் நேற்று திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனிடையே, டாண்டனின் மறைவை அடுத்து, சத்தீஸ்கரில் 7 நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

மேலும் இன்று நடைபெறும் சுதந்திரதின விழா கலை நிகழ்ச்சிகள் மற்றும் விருது வழங்கும் நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதேவேளையில் மரபுப்படி மூவர்ணக் கொடியேற்றி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகள் மட்டும் நடைபெறும் என அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. ஆளுநர் பல்ராம்ஜி தாஸ் டாண்டன் மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.