7 கோல்டன் குளோப் விருதுகளை வென்ற லாலா லேண்ட், பாப்டா விருதுக்கும் பரிந்துரை !

126

7 கோல்டன் குளோப் விருதுகளை வென்ற லாலா லேண்ட் திரைப்படம் இங்கிலாந்து நாட்டின் உயரிய விருதான பாப்டா விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
உலக அளவில் மிகவும் பிரபலமான கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் நேற்று நடைபெற்றது. இதில் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்ட லாலா லேண்ட் திரைப்படம் 7 விருதுகளை தட்டிச்சென்றது. இந்நிலையில் இங்கிலாந்து நாட்டில் சிறந்த திரைப்படங்களுக்காக வழங்கப்படும் உயரிய விருதான பாப்டா விருதுக்கும் லாலா லேண்ட் திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பாப்டா விருதுக்கான 11 பிரிவுகளிலும் இந்த திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.