மியூசியத்திலிருந்து திருடப்பட்ட தங்க டிபன் பாக்ஸ் : 2 பேர் கைது, திருட்டு பொருட்கள் பறிமுதல்

240

ஐதராபாத் மியூசியத்தில் திருடப்பட்ட நிஜாம் மன்னரின் தங்க டிபன் பாக்ஸை காவல்துறையினர் மீட்டுள்ளதுடன் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐதராபாத் மியூசியத்தில் இருந்து நிஜாம் மன்னரின் விலைமதிப்பற்ற வைரக்கற்கள் பதிக்கப்பட்ட தங்க டிபன் பாக்ஸ், தங்க குவளை மற்றும் தங்க ஸ்பூன் உள்ளிட்ட சில பொருட்களும் திருடப்பட்டன. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர். அதன்படி இருவரை பிடித்து விசாரித்த காவல்துறையினர், அவர்கள்தான் திருடர்கள் என்பதையும் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர்கள் திருடிய தங்க டிபன் பாக்ஸ், தங்க குவளை மற்றும் ஸ்பூன் ஆகியவைகளை பறிமுதல் செய்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திருட்டில் ஈடுபட்டவர்களின் பெயர் கவுஸ் பாஷா, முகமது முபின் என்பது தெரியவந்துள்ளது