ரயிலில் கடத்த முயன்ற 5 கிலோ தங்கம் பறிமுதல்..!

313

மும்பையில் இருந்து நாகர்கோவிலுக்கு ரயில் மூலம் ஐந்து கிலோ தங்க நகைகளை கடத்த முயன்ற இரண்டு வடமாநில வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மும்பையில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் ரயிலில் தங்க நகை கடத்தப்படுவதாக திருவனந்தபுரம் ரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தமிழக கேரள எல்லை பகுதியில் உள்ள பாறசாலை ரயில் நிலையத்திற்கு சென்ற தனிப்படை போலீசார் சம்பந்தப்பட்ட ரயிலில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது, வட மாநிலத்தை சேர்ந்த 2 பேர் ஐந்து கிலோ தங்க நகைகளை கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் வடமாநில வாலிபர்களை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட நகையின் மதிப்பு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.