துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்..!

105

சென்னை விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம், 17 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டன.

வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக தங்கம், போதைப்பொருட்கள் சென்னைக்கு கடத்தி வருவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இந்தநிலையில், சென்னை விமான நிலையத்தில், சுங்கத்துறை அதிகாரிகள் வழங்கம்போல் விமான பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனர். அப்போது, துபாயில் இருந்து சென்னை வந்த 4 பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான 520 கிராம் தங்கம் சட்டவிரோதமாக கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதேபோல், சென்னையில் இருந்து துபாய் செல்ல முயன்ற ஷாஜகான் என்பவரிடம் இருந்து 17 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.