ரூ.20 லட்சம் மதிப்பிலான 630 கிராம் தங்கம் பறிமுதல்..!

275

சென்னை விமான நிலையத்தில் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலானம 630 கிராம் தங்க நகைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, நகை கடத்தி வந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில், மலேசியா நாட்டை சேர்ந்த விமலேஷ்வரி என்ற பெண் பயணி சென்னை வந்தடைந்தார். அவரது உடமைகளை சோதனை செய்தபோது, 630 கிராம் தங்க நகை கைப் பையிலும், ஆடைக்குள்ளும் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் இது தொடர்பாக பெண் பயணியடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.