வங்கி அதிகாரியின் வீட்டில் கொள்ளை : கொள்ளைக்கு சதித்திட்டம் தீட்டிய பணிப்பெண்

230

பல்லாவரம் அருகே வங்கி அதிகாரியின் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட 133 சவரன் நகையை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழைய பல்லாவரத்தை சேர்ந்த யோகசேரன் தனியார் வங்கியில் முதன்மை மேலாளராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், யோகசேரனின் வீட்டில் வேலை செய்துவந்த மகாராணியிடம் விசாரணை நடத்தினர். அப்போது மகாராணியின் வழிக்காட்டல்படி அவரது உறவினரான அருண்குமார் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து அருண்குமார், சுரேஸ், செல்வம், கவுதம் ஆகியோரை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்து 133 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.