திருச்சிக்கு விமானம் மூலம் தங்க நகைகளை கடத்தி வந்த 3 பெண்கள் கைது..!

200

கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு விமானம் மூலம் 524 கிராம் தங்க நகைகளை கடத்தி வந்த 3 பெண்களை சுங்க துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

திருச்சி விமான நிலையத்திற்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து வந்த விமான பயணிகளிடம் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, ராமநாதபுரத்தை சேர்ந்த ஜீனத் பேகம், ஷகிலா பானு, திருச்சியை சேர்ந்த ஸ்டெல்லா மேரி ஆகியோர் உடமைகளை சோதனை செய்தனர். இதில் 17 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய 524 கிராம் தங்க நகைகள் மறைத்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து மூவரையும் கைது செய்த அதிகாரிகள் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.