மாதவராவ் குட்கா கிடங்கிற்கு சிபிஐ சீல்..!

128

சென்னை அருகே மாதவராவ்க்கு சொந்தமான குட்கா கிடங்கிற்கு சி.பி.ஐ அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தமிழகத்தில் தடையை மீறி குட்கா விற்பனை செய்யப்பட்டதாக குட்கா நிறுவன அதிபர் மாதவராவ் கடந்த 2016-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இதனையடுத்து இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்பின் வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ அதிகாரிகள், செங்குன்றத்தை அடுத்த சோத்துபாக்கத்தில் உள்ள மாதவராவ்க்கு சொந்தமான குட்கா கிடங்கிற்கு சீல் வைத்தனர். சி.பி.ஐ அதிகாரிகள் 6 பேர் இன்று காலை கிடங்கிற்கு சீல் வைத்ததாக தகவல் வந்துள்ளது.

முக்கிய ஆதாரங்கள் இருப்பதாக கிடங்கிற்கு சீல் வைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்றுமுன்தினம் மாதவராவிடம் சென்னை சிபிஐ அலுவலகத்தில் அதிகாரிகள் 12 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், குட்கா கிடங்கிற்கு தற்போது சீல் வைத்துள்ளனர். மேலும் . குட்கா ஊழலின் போது பணியாற்றிய அதிகாரிகள் பட்டியல் மற்றும் தொடர்புடைய நபர்கள் குறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.