ஆட்டினை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 8 பேர் மீது வழக்கு பதிவு..!

393

அரியானா மாநிலத்தில் ஆட்டினை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மெவாட் நகினா காவல் நிலையத்தில் அஸ்லு என்பவர் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தனக்கு சொந்தமான ஆடு ஒன்றினை அந்த பகுதியை சேர்ந்த 8 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக குறிப்பிட்டிருந்தார். அப்போது கருவுற்றிருந்த அந்த ஆடு இவர்களின் செயலால் இறந்துவிட்டதாகவும் புகாரில் அஸ்லு தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், தலைமறைவாக உள்ள சவாகர், ஹாரூன் உள்ளிட்ட 8 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். ஏற்கனவே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகள் பட்டியலில் இந்தியா அபாயகரமான நிலையில் இருக்கும் சமயத்தில், இவ்வாறான சைக்கோ கொடூரர்களை கைது செய்து நிரந்தமாக சிறையில் அடைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.