கோவா கால்பந்து அணிக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை 6 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக, ஐ.எஸ்.எல். ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி தெரிவித்துள்ளது.

233

கோவா கால்பந்து அணிக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை 6 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக, ஐ.எஸ்.எல். ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற 2வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில், சென்னையின் எஃப்.சி. அணி 3க்கு 2 என்ற கோல் கணக்கில் எப்.சி.கோவை அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. ஆட்டத்தின் முடிவில் இரு அணி வீரர்கள் மற்றும் சில நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கோவா அணியினர், பரிசளிப்பு விழாவை புறக்கணித்தனர். இந்த பிரச்சனை குறித்து விசாரணை மேற்கொண்ட ஐ.எஸ்.எல். ஒழுங்கு நடவடிக்கை குழு, போட்டிக்கு களங்கம் எற்படுத்தியதாக கூறி, கோவா அணிக்கு 11 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. அத்துடன், கோவா அணியின் இணை உரிமையாளர் ஸ்ரீனிவாஸ் டெம்போவுக்கு 2 ஆண்டுகளும், தத்தாராஜ் சால்கோகருக்கு 3 ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டது. அது மட்டும் அல்லாமல், 3வது சீசனில், கோவா அணியின் 15 புள்ளிகள் பறிக்கப்படும் எனவும் அறிவித்தது. இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்த கோவா அணி, நடைபெற்ற சம்பவத்துக்காக வருத்தம் தெரிவித்தது. இதனை பரிசீலனை செய்த ஒழுங்கு நடவடிக்கை குழு, அபராதத் தொகையை 6 கோடி ரூபாயாக குறைத்தது. மேலும் அணியின் நிர்வாகிகளுக்கு விதிக்கப்பட்ட தடை மற்றும் 15 புள்ளிகள் பறிக்கும் முடிவையும் கைவிட்டது.