தமிழக அரசை விமர்சனம் செய்யும் உரிமை நடிகர் கமலஹாசனுக்கு இருக்கிறது : காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.

478

தமிழக அரசை விமர்சனம் செய்யும் உரிமை நடிகர் கமலஹாசனுக்கு இருக்கிறது என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.
சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசை விமர்சிக்கும் உரிமை கமலஹாசனுக்கு உள்ளது என்றும், நடிகர் கமலஹாசனின் குற்றச்சாட்டுகளுக்கு தமிழக அமைச்சர்கள் கோபப்படுவதை விட்டு, பொறுமையாகப் பதில் சொல்ல வேண்டும் என்று தெரிவித்தார். நீட் தேர்வு தொடர்பான சட்ட மசோதாவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு இதுவரை அனுப்பாதது வேதனையளிப்பதாக உள்ளது என்று தமாகா துணைத் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்தார்.