தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் – ஜி.கே.வாசன்

228

தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து ஓராண்டு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், ஞானதேசிகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன், நீட் தேர்வில் விலக்கு அளிக்காமல் வெளிமாநிலங்களில் தேர்வு மையங்களை அமைத்தது தான் தமிழக மாணவர்களின் தோல்விக்கு காரணம் என்றார். தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து ஓராண்டு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றார்.