கூட்டுறவு மற்றும் வணிக வங்கிகள் கடன் வசூல் நடவடிக்கையை நிறுத்தவேண்டும்-ஜி.கே.வாசன்!

180

நெல்லுக்கு ஆதார விலையாக 4 ஆயிரத்து 500 ரூபாய் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக விவசாயிகளின் நெல்லுக்கு ஆதார விலையாக குவிண்டால் ஒன்றுக்கு ஆயிரத்து 600 ரூபாயை மத்திய அரசு வழங்கி வருவதை சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக வறட்சி, வெள்ளம் போன்றவற்றால் சாகுபடி குறைந்துள்ளதாகவும், தமிழகத்திற்கு வழங்கவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு தரவில்லை என்றும் கூறிய ஜி.கே.வாசன்,
விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று அனைத்து விவசாய கடன்களையும் மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
மேலும், கூட்டுறவு மற்றும் மத்திய அரசின் வணிக வங்கிகள், மீண்டும் பயிர்க்கடனை காலதாமதமின்றி வழங்க வேண்டும் என்று கூறிய அவர்,
கூட்டுறவு மற்றும் வணிக வங்கிகள் கடன் வசூல் நடவடிக்கையை நிறுத்தவேண்டும் என்றும் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.