மாநில பட்டியலில் உள்ள விவசாயத்தை மத்திய பட்டியலில் பொதுபட்டியலில் சேர்ப்பதற்கு ஜி.கே.வாசன் கண்டனம்..!

494

மாநில பட்டியலில் உள்ள விவசாயத்தை மத்திய பட்டியலில் பொதுபட்டியலில் சேர்ப்பதற்கு ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயத் தொழிலுக்கு முதன்மையான முக்கியதுவம் கொடுக்கக்கூடிய அரசாக மத்திய, மாநில அரசுகள் செயல்படவேண்டும் என்று கூறியுள்ளார்.
அண்டை மாநிலத்தில் இருந்து மத்திய அரசு தமிழகத்திற்கு தண்ணீரை பெற்று தரவில்லை என்று கூறிய ஜி.கே.வாசன், தமிழகத்தின் விவசாயத்தை மத்திய பட்டியலிலோ, பொது பட்டியலிலோ சேர்த்தால் என்ன பயன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தின் அனைத்து பிரச்சனைகளிலும் மத்திய பாஜக அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதாக கூறிய ஜி.கே.வாசன், இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாக மாநில அரசோடு இரண்டற கலந்து பேசி விவசாயத்தை மேம்படுத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.