பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையை வரும் காலங்களில் தமிழக அரசும், பொதுமக்களும் கடைபிடிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பைகள், பாட்டில்களை பயன்படுத்திய பிறகு, திறந்தவெளி மற்றும் நீர்நிலைகளில் போடுவதால் மக்காமல் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனால், மனிதனுக்கு மட்டுமின்றி, விலங்கு, பறவை, கடல்வாழ் உயிரினங்களுக்கு பல்வேறு விதமான நோய்கள் ஏற்படுவதாகவும் வாசன் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டிற்கு தடை விதிக்க சட்ட கொண்டு வரவேண்டும் என்று கூறியுள்ள அவர், இனி வரும் காலங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையை ஆளும் ஆட்சியாளர்களும், பொதுமக்களும் கடை பிடிக்க வேண்டியது கடமையாகும் என்று தெரிவித்துள்ளார்.